சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு புகைப்படங்கள்!
Chithirai muzhunilavu vanniya ilaingar peruvizha manadu images
மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
-gtngh.jpg)
15 லட்சத்துக்கும் கூடுதலான வன்னியர்கள் இந்த மாநாட்டுத் திடலில் திரண்டிருந்தனர்.

மேலும், மாமல்லபுரத்தை நெருங்க முடியாமல் செங்கல்பட்டுக்கு அப்பாலும் பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் லட்சக்கணக்கான வன்னியர்கள் அணிவகுத்துக் காத்திருந்தனர்.











லட்சக் கணக்கில் தொண்டர்கள் திரண்டிருந்தாலும் கூட எந்தவொரு இடத்திலும் சிறு ஒழுங்குமீறல்கள் கூட நடைபெறவில்லை.

அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும் மாநாட்டிற்கு வந்து, பத்திரமாக சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்றுள்ளனர்.

ஆந்திர மாநிலத்திலிருந்து இந்த மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் கொல்லு ரவீந்திரா, வன்னியகுல ஷத்திரிய கார்ப்பரேசனின் தலைவர் சி.ஆர்.இராஜன், கர்நாடகத்திலிருந்து பங்கேற்ற முன்னாள், இந்நாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மராட்டியம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்தும், மலேஷியாவில் இருந்தும் ஆயிரக்கணக்கில் வன்னியர்கள் கலந்து கொண்டனர்.

மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க தமிழக அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்;
அதனடிப்படையில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்;
அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்;

பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 2% உயர்த்த வேண்டும்; இந்தியாவில் இட ஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பை நீக்க வேண்டும்;
கிரீமிலேயர் முறையை அகற்ற வேண்டும்; மேலும் தனியார் துறை மற்றும் உயர்நீதித் துறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்;

அனைத்து சமூகங்களுக்கும் நிதி அதிகாரம் கொண்ட வாரியங்கள் அமைக்கப்பட வேண்டும்; மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை ஒழிக்க வேண்டும்;

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்;

வளர்ச்சிக் குறியீடுகளில் மிகவும் பின்தங்கியிருக்கும் வடமாவட்டங்களின் முன்னேற்றத்திற்காக சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.



English Summary
Chithirai muzhunilavu vanniya ilaingar peruvizha manadu images