பத்திரிகையாளர்களை மிரட்டி, தாக்குவதற்கு முயன்ற காவல்துறை - சென்னை பிரஸ் க்ளப் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை மிரட்டியதுடன் தாக்குவதற்கு முயன்ற காவல்துறையின் நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டித்துள்ளது.

இதுகுறித்த அதன் செய்திக்குறிப்பில், "சென்னை மே தினப் பூங்காவில் தூய்மைப் பணியாளர்கள் இன்று ஒன்றுகூடியுள்ளனர். இதுதொடர்பாக செய்தி சேரிக்க பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் அங்கு சென்றுள்ளனர். 

அங்கு வந்த காவல்துறையினர், தூய்மைப்பணியாளர்களை காவல்துறை வாகனங்களில் ஏற்றியுள்ளனர். இந்த நிகழ்வை படம் பிடித்த ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக் கலைஞர்களை பாதுகப்பு பணியில் இருந்த காவல்துறையினர் பணி செய்ய விடாமல் தடுத்ததுடன் அவர்களை தள்ளிவிட்டுள்ளனர்.

இதுகுறித்து அங்கு பணியில் இருந்த இணை ஆணையர் விஜயகுமாரிடம் பத்திரிகையாளர்களை புகார் அளித்துள்ளனர். ஆனால், விஜயகுமார் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசியதுடன், தொடர்ந்து செய்தி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால்ஈடுபட்டால் பத்திரிகையாளர்களை கைது செய்வேன் என்றும் மிரட்டியுள்ளார்.

பொதுஇடத்தில் நடைபெறும் ஒரு நிகழ்வை படம் பிடிப்பதும், ஒளிப்பதிவு செயவதும், செய்தி சேகரிப்பதும் பத்திரிகையாளர்களின் உரிமை. இதை தடுப்பது கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறையாகும்.பத்திரிகையாளர்களிடம் காவல்துறையினர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கே வகுப்பெடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது அதிர்ச்சிகரமாக உள்ளது. பத்திரிகையாளர்களின் அராஜகமாக நடந்துகொண்ட காவல்துறையினரை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.

இனி இதுபோன்ற நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபடக்கூடாது என்பதை காவல்துறை தலைமை உறுதி செய்ய வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Press Club condemn to TN Police


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->