அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு! எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல செய்தி! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Edappadi Palaniswami ADMK GS case Madras HC
2022 ஜூலை 11 அன்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார். அந்த முடிவையும், பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானங்களையும் எதிர்த்து திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை உரிமையியல் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து அவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி பி. பி. பாலாஜி முன், பழனிசாமி தரப்பில் 2018 முதல் சூரியமூர்த்தி கட்சியிலேயே உறுப்பினராக இல்லை என்றும், 2021 சட்டமன்றத் தேர்தலில் அவரே எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்தார் என்றும் வாதிடப்பட்டது. எனவே, உறுப்பினராக இல்லாதவருக்கு கட்சித் தீர்மானங்களை எதிர்க்க உரிமை இல்லை என தெரிவிக்கப்பட்டது.
மாறாக, சூரியமூர்த்தி தரப்பில் அவர் இன்னும் கட்சியின் உறுப்பினராக உள்ளார் என்றும், பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் கொள்கைக்கு முரணாக விதிகள் மாற்றப்பட்டதாக வாதிடப்பட்டது.
இருதரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டை ஏற்று, சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க மறுத்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தார். அதேசமயம், சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த வழக்கையும் நிராகரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவி தொடர்பான சட்டப்பூர்வ சிக்கலில் முக்கிய வெற்றி பெற்றதாகக் கருதப்படுகிறது.
English Summary
Edappadi Palaniswami ADMK GS case Madras HC