"இப்போ எதுக்கு வரீங்க?".. பொதுமக்கள் கொந்தளிப்பு.. திமுக வேட்பாளர் விரட்டியடிப்பு.!!
Chennai people argue with Center Chennai DMK candidate
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் சென்னையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் திமுக வேட்பாளர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது.
தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனிடம் மயிலாப்பூர் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை விடுத்தும் அதனை நிறைவேற்றவில்லை என பிரச்சாரம் சென்றபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதே பன்று வடசென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமி இடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரச்சாரம் செய்ய முடியாமல் திமுக வேட்பாளர்கள் திரும்பி சென்றனர். இந்த நிலையில் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் வாக்கு சேகரிக்க சென்றபோது பொதுமக்கள் பிரச்சார வாகனத்தை மறித்து தயாநிதி மாறனை நோக்கி கேள்வி எழுப்பினர்.
இதனால் கடுப்பான தயாநிதி மறன் பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Chennai people argue with Center Chennai DMK candidate