கிருஸ்துவ மதம் மாறிய தலித் பால்ராஜ்., சான்றிதழ் தர முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


மதம் மாறியவர்களுக்கு கலப்பு திருமண சான்றிதழ் வழங்கினால், சலுகைகளை தவறாக பயன்படுத்தக் கூடும் என்று, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம் கருத்து தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துவ ஆதிதிராவிடர் என்பதால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என சாதி சான்றிதழ் பெற்ற பால்ராஜ் என்பவர் அருந்ததியர் இனத்தை சேர்ந்த அமுதா என்பவரை திருமணம் செய்து கொண்டு, கலப்பு திருமண சான்றிதழ் வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த வழக்கில் நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம் கருத்து தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துவ (தலித்) ஆதிதிராவிடர் என்பதால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என சாதி சான்றிதழ் பெற்ற பால்ராஜ் என்பவர், அருந்ததியர் இனத்தை சேர்ந்த அமுதா என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இந்த திருமணத்துக்கு, கலப்பு திருமணம் புரிந்தவர்களுக்கான சான்றிதழ் வழங்க கோரி கொடுத்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பால்ராஜ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எம் எஸ் சுப்பிரமணியம் அவர்கள், மதம் மாறியவர்களுக்கு கலப்புத் திருமணச் சான்றிதழ் வழங்கினால், சலுகைகளை தவறாக பயன்படுத்தக் கூடும்.

மதம் மாறியவர்களுக்கு கலப்பு திருமண சான்று வழங்குமாறு உத்தரவிட முடியாது என்று, தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில், "1977ஆம் ஆண்டு தமிழக அரசின் அரசாணையின்படி மதம் மாறிய நபர்களுக்கு கலப்பு திருமண சான்றிதழ் வழங்க முடியாது. எனவே பால்ராஜ் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது" என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai hc order to Mixed marriage certificate


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->