#BREAKING || அதிமுக ஒற்றை தலைமை பரபரப்புக்கிடையே., சற்றுமுன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட தடை வழக்கு.! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் கட்சி விதிகளில் திருத்தம் செய்வதற்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதிமுகவின் கட்சி விதிகளில் திருத்தம் செய்யக்கூடாது என்று, கட்சி உறுப்பினர்கள் என்ற முறையில் கே சி பழனிசாமி மகன் சுரேன் என்பவரும், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவரும் உட்கட்சி தேர்தலை செல்லாது என்று அறிவிக்க கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அதில் இடைக்கால மனுக்களாக தற்போது இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவில் குறிப்பாக கட்சி விதிகளின்படி பொதுச் செயலாளருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதிவுகளுக்கு வழங்கியது செல்லாது என்றும், பொதுக்குழு கூட்டத்தை கூட்ட தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும், கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை விரைவில் வரலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CHENNAI HC ADMK KC PALANISAMI SON


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->