#BigBreaking || திமுக எம்எல்ஏ., கைது? சற்றுமுன் சென்னை மாநகராட்சி காவல்துறையிடம் பரபரப்பு புகார் மனு.! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் கேபி சங்கர்.

இந்த நிலையில், இவரின் சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏ கே பி சங்கர் தொடர்ந்து ரவுடிசம் மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாக புகார்கள் எழுந்தது. மேலும், கே பி சங்கரின் செயல்பாடுகள் திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

நிலைமை இப்படி இருக்க, அண்மையில் மாநகராட்சி பொறியாளரை கன்னத்தில் அறைந்து தாக்கியதாக திமுக எம்எல்ஏ கேபி சங்கர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு வரவே, திமுக தலைமை அவரின் கட்சி பதவியை பறித்து உத்தரவிட்டது.

முன்னதாக யார் தவறு செய்தலும் விட்மேட்டேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சத்தியம் செய்து இருப்பதால், திமுக எம்எல்ஏ சங்கரை கைது செய்து நடவடிக்கை எடுப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

அதே சமயத்தில் அவர் மீது சட்ட ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், திமுக எம்.எல்.ஏ. கே பி சங்கரை கைது செய்யக்கோரி, ட்விட்டர் பக்கத்தில் பலரும் #Arrest_MLAShankar என்ற ஹேஷ்டேக்கை இன்று காலை முதல் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மாநகராட்சி பொறியாளரை தாக்கியதாக திமுக எம்எல்ஏ சங்கர் மீது சென்னை மாநகராட்சி சார்பில் காவல்துறையில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் மீது FIR (முதல் தகவல் அறிக்கை), வழக்கு உள்ளிட்டவைகள் பதியப்பட்டு, விரைவில் கைது செய்யட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Corporation Complaint to DMK MLA SHANKAR


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->