GST வரிக்குறைப்பு... மத்திய அரசைப் பாராட்டலாம்... டாக்டர் இராமதாஸ்!
Central Government GST PMK Ramadoss
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கு பாமக நிறுவனர், தலைவர் மருத்துவர் இராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில்,"ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் மீதான வரிகளைக் குறைத்ததன் மூலம், ஏழை பாட்டாளிகளின் மீதான பணச்சுமை குறைகிறது. இதற்காக மத்திய அரசைப் பாராட்டலாம்" என குறிப்பிட்டுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஜி.எஸ்.டி. கவுன்சில் மேற்கொண்ட வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தத்தை வரவேற்கிறேன். மாற்றத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தங்களை வழிநடத்துவதில் தொலைநோக்கு பார்வையோடு தலைமை தாங்கிய வழிநடத்திய பிரதமர் மோடிக்கும், எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் வளர்ச்சி சார்ந்த ஜி.எஸ்.டி. வரியை கட்டமைத்ததற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கும் நன்றி.அத்தியாவசியப் பொருட்கள், சுகாதாரம், வேளாண்மை, காப்பீடு ஆகியவற்றை எளிமைப்படுத்தும் இந்த நடவடிக்கை பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும், நுகர்வோர் நம்பிக்கையை அதிகரிக்கும் என கூறியுள்ளார்.
English Summary
Central Government GST PMK Ramadoss