ஊர், தெரு பெயர்களில் உள்ள சாதி பெயர் நீக்கம் - தமிழக அரசு அரசாணை!
caste name TN Govt order
முதலமைச்சர் அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள சாதிப்பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அரசாணையில், ‘ஆதி திராவிடர் காலனி’, ‘ஹரிஜன் குடியிருப்பு’, ‘வண்ணான்குளம்’, ‘பறையர் தெரு’, ‘சக்கிலியர் சாலை’ போன்ற சாதி சார்ந்த பெயர்கள் நீக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், தெருக்கள் மற்றும் சாலைகளுக்கு திருவள்ளுவர், கபிலர், பாரதியார், பாரதிதாசன், தந்தை பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் போன்ற சமூக முன்னோடிகளின் பெயர்கள் வைக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், குளம் மற்றும் நீர்நிலைகளுக்கு ரோஜா, மல்லி, முல்லை போன்ற பூக்களின் பெயர்கள் வைக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
சாதிப்பெயர்களை நீக்கும் மற்றும் புதிய பெயர்களை வழங்கும் பணிகளை நவம்பர் 19க்குள் நிறைவு செய்ய மாவட்ட நிர்வாகத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.