திமுக எம்.பியின் மருமகன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு..!! - Seithipunal
Seithipunal


திமுக எம்பி திருச்சி சிவா வீட்டிற்கு அருகில் பேட்மிண்டன் அரங்கு திறப்பு விழா கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதற்காக வைக்கப்பட்டிருந்த கல்வெட்டில் சிவாவின் பெயர் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து திருச்சி திமுகவில் செல்வாக்கு மிக்க மூத்த அமைச்சர் கே.என் நேருவிற்கு எதிரா திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைக் கண்டு கொதித்தெழுந்த கே.என் நேரு ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீட்டிற்கே சென்று அவரது கார் உள்ளிட்ட உடமைகளை அடித்து உடைத்தனர். சிவாவின் ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் நடத்தினர். திருச்சி சிவாவின் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தான வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசி இருந்த திருச்சி சிவாவின் மருமகன் கராத்தே முத்துக்குமார் "திமுக ஆட்சியில் எம்.பி வீட்டுக்கு கூட பாதுகாப்பு இல்லை. வன்முறையில் ஈடுபட்ட அமைச்சர் கே என் நேருவின் ஆதரவாளர்களை போலீசார் கைது செய்யவில்லை. எங்கள் ஆதரவாளர்களை மட்டும் போலீசார் கைது செய்து பாரபட்சம் காட்டுவதற்காக உள்ளது" என திமுகவையும் காவல்துறையினரையும் நேரடியாக குற்றம் சாட்டி இருந்தார். 

இந்த பிரச்சனைக்கு அப்போதே முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைச்சர் கே.என் நேரு திருச்சி சிவாவின் வீட்டிற்கு நேரடியாக சென்று பேசினார். காரணமாக இரு தரப்பினரும் சமாதானம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த கலவரம் குறித்து சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டது திருச்சி சிவாவின் மருமகன் கராத்தே முத்துக்குமார் தான் என திமுக தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் திருச்சி சிவாவின் மருமகன் கராத்தே முத்துக்குமார் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். விஜய சாரதி என்பவரை திருடன் என நினைத்து தாக்கிய வழக்கில் முத்துக்குமார் உட்பட 4 பேர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் மீது ஏற்கனவே கார் திருடிய வழக்கு நிலவையில் உள்ள நிலையில் தற்போது விஜய சாரதி என்பவரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக கே.என் நேராவின் தூண்டுதலின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்குமோ என திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Case registered against son in law of Trichy Siva


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->