CM ஸ்டாலினுக்கு பாராட்டு விழா! தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள் - வானதி சீனிவாசன் பேட்டி!
BJP Vanathi sinivasan condemn to DMK MK Stalin
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மீது குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் சட்டப்பேரவையில் முதல்வர், தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம் என பெருமிதம் பேசுவது வேடிக்கையாக இருப்பதாக தெரிவித்தார்.
ஈரோட்டில் தோட்ட வீட்டு மூதாட்டி கொலை மற்றும் திருப்பூரில் நடந்த சம்பவங்களை சுட்டிக்காட்டிய அவர், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாகி கொண்டிருக்க, திமுக அரசு முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்தி தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறது" என்றார்.
மேலும், மத சார்ந்த தீவிரவாத தாக்குதல்களில் காவலர் செல்வகுமார், வீர கணேஷ், சசிகுமார் கொல்லப்பட்டனர் என நினைவுபடுத்திய அவர், "கோவையில் கார் குண்டு வெடிப்புக்கே நான்கு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, ஆனாலும் முதலமைச்சர் தமிழகத்தில் மதவாதம் இல்லை என கூறுவது உண்மை நிலைமைக்கு புறம்பானது" என கூறினார்.
நீட் தேர்வை எதிர்க்கும் திமுகவின் நிலைப்பாடு பொய்யானது என கூறிய அவர், "அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு மூலம் மருத்துவக் கனவை நனவாக்கி வருகின்றனர்" என்றார்.
பத்திரிகை சுதந்திரத்தை பேசும் முதலமைச்சர், திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவித்தால் தாக்குதல்கள் நடத்தப்படுவதையும், மோடியை விமர்சிக்கும் சமூக ஊடக பதிவுகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படாததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
English Summary
BJP Vanathi sinivasan condemn to DMK MK Stalin