இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் கைது! பாஜக நாராயணன் பரபரப்பு அறிக்கை!
BJP Narayanana say about naqoor Terrorist arrest
பாரதிய ஜனதா மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள அறிக்கையில், "நாகூரை சேர்ந்த அறுபது வயதான இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் அபுபக்கர் சித்திக் மற்றும் மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது அலி ஆகிய இருவரையும் முப்பது வருட தேடலுக்கு பின்னர், கடந்த 1ம் தேதியன்று ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் தமிழக பயங்கரவாத எதிர்ப்பு படை கைது வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது.
1995ம் ஆண்டு சென்னை சிந்தாதிரிபேட்டையில் உள்ள ஹிந்து முன்னணி அலுவலக குண்டு வெடிப்பு வழக்கிலும், அதே ஆண்டு நாகூரில் நடைபெற்ற பார்சல் வெடிகுண்டு வழக்கிலும், 1999 ம் ஆண்டு சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட, சென்னை, திருச்சி, கோவை மற்றும் கேரளாவில் நடைபெற்ற பல்வேறு குண்டு வெடிப்பு வழக்குகளிலும், 2012ம் ஆண்டு வேலூரில் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கிலும், பெங்களூரில் 2013ம் ஆண்டு நடைபெற்ற பாஜக அலுவலக குண்டு வெடிப்பு வழக்கிலும் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்தவன் அபுபக்கர் சித்திக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நபர் தடைசெய்யப்பட்ட அல்-உம்மா இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்ததுடன் பல்வேறு தீவிரவாத இயக்கங்களின் தொடர்பில் இருந்தவன்.
30 வருடங்களுக்கு பின்னர், பல்வேறு குண்டுவெடிப்புகளை நிகழ்த்திய இந்த நபர்களை கைது செய்திருப்பது தாமதமாக இருந்தாலும், இது நாள் வரை அவர்களுக்கு உதவி செய்தது யார், இந்த நபர்களின் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பதையெல்லாம் விசாரித்து கண்டறிந்து அவர்களையும் ஒருவர் பின் ஒருவராக கைது செய்து மத அடிப்படைவாத பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக காவல் துறைக்கு உள்ளது" என்று, நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Narayanana say about naqoor Terrorist arrest