ஆதாரங்களை சமர்ப்பித்தால் பயங்கரவாதிகளை ஒப்படைக்க தாயார்: பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர்...!
Pakistans former foreign minister says he will hand over terrorists if evidence is presented
இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஹபீஸ் சையத், மசூத் அசார் உள்ளிட்ட பயங்கரவாதிகளை ஒப்படைப்பதில் பாகிஸ்தானுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்று அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோ ஜர்தாரி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் நல்ல உறவை கடைபிடிக்கும் விதமாக, தேடப்படும் லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சையத் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைக்க வாய்ப்புள்ளதா..? என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதிலளிக்கையில் கூறியதாவது: பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு நடத்தி, இருதரப்பும் விவாதிக்கும் பிரச்னைகளில் முக்கியமானதாக பயங்கரவாதம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், பாகிஸ்தான் இதனை ஒருபோதும் எதிர்க்காது என்று அவர் நம்புவதாகவும், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புகள் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையத், பாகிஸ்தானில் 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் பதிலளிக்கையில், இந்தியா நீதிமன்றத்தில் தேவையான ஆதாரங்களை சமர்ப்பித்தால் ஹபீஸ் சையத், மசூத் அசார் உள்ளிட்ட பயங்கரவாதிகளை ஒப்படைக்க பாகிஸ்தான் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், அடிப்படை விஷயங்களை கடைபிடிக்க இந்தியா மறுக்கிறதாகவும், இந்தியா ஒத்துழைத்தால், எந்த பயங்கரவாதியையும் ஒப்படைப்பதில் பாகிஸ்தானுக்கு ஆட்சேபம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்தியா இதுவரை ஒத்துழைக்கவில்லை எனவும், ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் அரசின் காவலில் இருக்கிறதாகவும், மசூத் அசாரை பாகிஸ்தானால் கைது செய்ய முடியவில்லை என்றும், அவர் ஆப்கானிஸ்தானில் இருப்பதாக பாகிஸ்தான் நம்புவதாக பிலாவல் புட்டோ ஜர்தாரி குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Pakistans former foreign minister says he will hand over terrorists if evidence is presented