கிராமத்து ஸ்டைலில் புடலங்காய் பொரியல் செய்வது எப்படி?
how to prepare pudalangai poriyal
புடலங்காயை வைத்து கிராமத்து ஸ்டைலில் புடலங்காய் பொரியல் செய்வது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
தேங்காய் துண்டுகள்
பச்சை மிளகாய்
பூண்டு
மஞ்சள் தூள்
வெங்காயம்
கடுகு
சீரகம்
கல் உப்பு
கருவேப்பிலை
எண்ணெய்
தண்ணீர்
செய்முறை:-
முதலில் புடலங்காயை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காயை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு மிக்சி ஜாரில் வெங்காயம், தேங்காய், பச்சை மிளகாய், பூண்டு, சீரகம் உள்ளிட்டவற்றை சேர்த்து, கொரகொரப்பாக அரைக்கவும்.
இதையடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு அரைத்த விழுது, மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்கவும்.
பச்சை வாசனை போனதும் புடலங்காயை போட்டு வதக்கி சிறிது தண்ணீர் தெளித்து வேக வைத்து இறக்கினால் சுவையான, கிராமத்து புடலங்காய் பொரியல் தயார்.
English Summary
how to prepare pudalangai poriyal