ரயில் சேவையில் மாற்றம்: எதிர்வரும் 07, 08, 09, 10-ஆம் தேதிகளில் ஈரோடு-ஜோலார்பேட்டை ரயில் திருப்பத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும்..! - Seithipunal
Seithipunal


எதிர்வரும் 07, 08, 09, 10-ஆம் தேதிகளில் ஈரோடு -ஜோலார்பேட்டை ரயில் திருப்பத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஏனெனில், ஜோலார்பேட்டை-திருப்பத்தூர் மார்க்கத்தில் ரயில்வே சிக்னல் மாற்றியமைக்கும் பணிகள் நடக்கவுள்ளது. இதனால், இந்த மார்க்கத்தில் இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில் குறிப்பிட்ட நாட்கள், மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளது.

இதன்படி, ஈரோடு-ஜோலார்பேட்டை ரயில் (56108) வரும் 07, 08, 09, 10-ஆம் தேதிகளில் ஈரோட்டில் காலை 06 மணிக்கு புறப்பட்டு, சேலம் வழியே திருப்பத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், திருப்பத்தூர்-ஜோலார்பேட்டை இடையே ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், மறுமார்க்கத்தில் ஜோலார்பேட்டை-ஈரோடு ரயில் (56107) வரும் 07, 08, 09, 10-ஆம் தேதிகளில், ஜோலார்பேட்டை-திருப்பத்தூர் இடையே ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. பின்னர் திருப்பத்தூரில் பிற்பகல் 02.45 மணிக்கு புறப்பட்டு, ஈரோட்டிற்கு இயக்கப்படுகிறது என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

On the upcoming 07th to 10th the Erode to Jolarpet train will operate only up to Tirupattur


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->