நாவில் எச்சில் ஊற வைக்கும் காலிஃப்ளவர் சுக்கா..!!
How to make cauliflower sukka
நாம் இதுவரைக்கும் காலிஃப்ளவரில் குழம்பு, மஞ்சூரியன் உள்ளிட்ட சிலவற்றை மட்டுமே செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் புதிய முறையில் காலிஃப்ளவர் சுக்கா செய்வது எப்படி என்று இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
காலிபிளவர் பூண்டு, தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மல்லித்தூள், மிளகாய் தூள், சின்ன வெங்காயம்.
மசாலா பொருட்கள்:-
மிளகு, சீரகம், சோம்பு, வரமிளகாய், பட்டை, கிராம்பு.
செய்முறை
முதலில் காலிஃப்ளவரை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலில் மசாலா அரைக்க தேவையான பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதைத் தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வானவில் சிறிது எண்ணெய் ஊற்றி சோம்பு வெங்காயம், பூண்டு உள்ளிட்டவற்றை சேர்த்து ஒன்றாக வதக்கியவுடன் தக்காளியை போட்டு வதக்கவும்.
இவை அனைத்தும் நன்கு வதங்கியவுடன் மிளகாய் தூள் மற்றும் காலிஃப்ளவரை சேர்த்து வதக்க வேண்டும்.
இதனுடன் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து கிளற வேண்டும். ஐந்து நிமிடம் நன்றாக கிளறி வேக வைத்த பின்னர் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான காலிஃப்ளவர் சுக்கா ரெடி.
English Summary
How to make cauliflower sukka