திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்: 05 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு.. !
5000 police personnel deployed for Tiruchendur temple consecration
வரும் 07-ஆம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு இன்று திருச்செந்தூர் ஐ.எம்.ஏ. மஹாலில், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) சந்தோஷ் ஹாதிமணி மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆகியோர் தலைமையில் கும்பாபிஷேக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனையின் எடுத்த முடிவின் படி, கும்பாபிஷேகத்திற்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உட்பட தென்காசி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர் திருநெல்வேலி நகரம், திண்டுக்கல், விருதுநகர், மதுரை நகரம் ஆகிய மாவட்டம்/நகரங்களைச் சேர்ந்த 9 எஸ்.பி.க்கள், 32 ஏ.டி.எஸ்.பி.க்கள், 73 ஏ.எஸ்.பி.க்கள்/ டி.எஸ்.பி.க்கள், 87 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 20 மாவட்டங்களுக்கும் மேற்பட்ட சுமார் 5,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இக்கூட்டத்தில் ஏ.டி.எஸ்.பி.க்கள், ஏ.எஸ்.பி.க்கள்/ டி.எஸ்.பி.க்கள் உட்பட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
English Summary
5000 police personnel deployed for Tiruchendur temple consecration