சளியை அடித்து விரட்டும் சுக்கு கசாயம்..!!
How to prepare sukku kasayam
சளி, தலைவலி உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் ஒரு அரு மருந்தாக சுக்கு பயன்படும். இந்த சுக்கை வைத்து கசாயம் வைப்பது எப்படி என்று இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி விதை, சுக்கு, கருப்பட்டி, மிளகு.
செய்முறை
முதலில் கொத்தமல்லி விதை, மிளகு உள்ளிட்டவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சூடானதும் அதில் கருப்பட்டி மற்றும் அரைத்து வைத்துள்ள சுக்கு, மிளகு பொடியை போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
தண்ணீர் நன்கு கொதித்து மனம் வந்தவுடன் இறக்கினால் சுக்கு கசாயம் தயார்.
English Summary
How to prepare sukku kasayam