வங்கியில் பணமோசடி, குற்றவியல் சதி வழக்கு: நேஹல் மோடியை கைது செய்துள்ள அமெரிக்கா..!
US arrests Nehal Modi in bank fraud and criminal conspiracy case
இந்தியாவில் வங்கியில் பணமோசடி, குற்றவியல் சதி மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி, இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2008-ஆம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கி (பி.என்.பி) அதிகாரிகளுடன் இணைந்து, ஒப்பந்தக் கடிதங்களை வெளியிடுவதில் செயல்பட்டதாகவும், வங்கிக்கு ரூ.8,526 கோடி மதிப்புள்ள இழப்புகளை ஏற்படுத்தியதாகவும் நிரவ் மோடி மற்றும் பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

நேஹல் மோடியின் கைது குறித்து அமெரிக்க நீதித்துறை கூறியுள்ளதாவது:
இந்தியாவின் கோரிக்கையை தொடர்ந்து வங்கி மோசடி வழக்கில் பெல்ஜியத்தில் வசிக்கும் நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடியை கைது செய்ததாகவும், நேற்று காவலில் எடுக்கப்பட்ட நேஹல் மோடியை, ஒப்படைப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றதாக கூறியுள்ளது.
நீரவ் மோடியின் குற்றச் செயல்களின் மூலம் கிடைத்த வருமானத்தை பங்கு போடுவதில் நேஹல் முக்கிய பங்கு வகித்ததாக அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன், போலி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு பரிவர்த்தனைகளின் வலைப்பின்னல் மூலம் அதிக அளவிலான சட்டவிரோத நிதியை மறைத்து மாற்றுவதில் அவர் உதவி செய்துள்ளதாக அமெரிக்க நீதித்துறை மேலும், கூறியுள்ளது.
English Summary
US arrests Nehal Modi in bank fraud and criminal conspiracy case