இனி ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!!
chennai high court order inport tax must in foreign ayurvedic medicines
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகளுக்கு கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதாவது சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோடாரி தைலம் உள்ளிட்டவற்றை சுங்க அதிகாரிகள் முடக்கிவைத்ததை எதிர்த்து ஆக்சென் நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது கோடாரி தைலம் சுங்க கட்டண வரம்புக்குள் வருவதால், இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகள் சோதனைக்கு உட்பட்டதுதான்.
-lv5ph.jpg)
இது மருந்து மற்றும் ஒப்பனை பொருட்கள் சட்டம் ஆயுர்வேத பொருட்களுக்கும் பொருந்தும். அதனால், அனைத்து மருந்து பொருட்களுக்கும் இறக்குமதி உரிமம் பெற வேண்டும் என்று உத்தரவிடபட்டது.
மேலும், ஆயுர்வேத மருந்துகளுக்கு லைசென்ஸ் பெறுவதற்கு விண்ணப்பிப்பது தொடர்பான பழைய விதிகளிலும் மாற்றம் கொண்டுவர வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, மனுதாரரின் சரக்கை ஆய்வு செய்து விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
English Summary
chennai high court order inport tax must in foreign ayurvedic medicines