வடமாவட்ட வெள்ளம்! திமுக அரசு உண்டாக்கிய பேரழிவு - பகிரங்கமாக குற்றம் சாட்டும் பாஜக எம்எல்ஏ வானதி! - Seithipunal
Seithipunal


பல வட மாவட்டங்களை வெள்ளத்தில் மிதக்க விட்டது, திமுக அரசு உண்டாக்கிய பேரழிவுதான் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "மக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி ஆலோசித்து முடிவெடுப்பது தான் ஒரு மாநில முதல்வருக்கான ஸ்டாலின்? ஒரு நாள் முழுக்க 5000 கன அடியில் இருந்து 30,000 கன அடி வரை படிப்படியாக திறந்து விடப்பட்டுக் கொண்டிருந்த சாத்தனூர் அணை நீர், ஒரே நாள் இரவில் மக்களுக்கான முன்னறிவிப்பின்றி சுமார் 1,70,000 கன அடி வரை திறந்துவிடப்பட்டது எதனால்? 

அதிகாரிகளுக்கு நடுவே நடு நிசியில் எழுதப்பட்ட எச்சரிக்கை கடிதம் மக்களை எப்படி சென்றடையும்? 5 கட்ட எச்சரிக்கைகள் விடப்பட்டது என்று கூறும் திமுக அரசு, அந்த தகவல்கள் அப்பகுதி மக்களை சென்றடைந்ததா என்பதை கவனிக்கத் தவறியது ஏன்? 

மக்களுக்கு சரியான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிடாமல், குறித்த நேரத்தில் அவர்களை வெளியேற்றாமல், அவர்களுக்கான பாதுகாப்பு முகாம்களை அமைக்காமல், பல வட மாவட்டங்களை வெள்ளத்தில் மிதக்க விட்டது, உங்கள் அரசு உண்டாக்கிய பேரழிவுதானே?

எச்சரிக்கை ஏதுமின்றி திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தங்கள் உடைமைகளை இழந்த மக்கள், உணவு மற்றும் குடிநீருக்காக வீதியில் இறங்கி போராடும் பரிதாப நிலைக்கு காரணம் உங்கள் அலட்சியம் தானே?

இந்த விடியா அரசின் நிர்வாகக் குளறுபடிகளுக்கு இன்னும் எத்தனை மக்கள் தங்கள் உயிர் மற்றும் உடைமைகளைப் பறிகொடுக்க வேண்டும்? என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP MLA Vanathi Srinivasan Condemn to DMK Govt MK Stalin Sathanur dam issue


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->