நெஞ்சு பொறுக்கவில்லையே! காங்கிரஸ், சி.பி.ஐ., எம்., திக எல்லாம் எங்க?.. பாஜக சார்பில் மாபெரும் போராட்டம்.! - Seithipunal
Seithipunal


முல்லைப்பெரியாறு அணை திறப்பில் நெஞ்சு பொறுக்கவில்லையே! இந்த காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், திக உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாட்டை நினைத்துவிட்டால்? வரும் 8-ம் தேதி பாஜக விவசாய சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப்போராட்டம் நடைபெறும் என பாஜக  ஜி.கே நாகராஜ். தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணித்தலைவர் ஜி.கே நகரின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படி, முல்லைபெரியாறு அணையில் நீர்மட்டத்தை 142 அடி உயரம்வரை நீர்நிரப்பி தேனி, கம்பம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளை திமுக அரசு காப்பாற்றும் என்று நினைத்திருந்த வேளையில், 

அதிர்ச்சி வைத்தியமாக 138 அடி நீர்மட்டத்திலேயே ரகசியமாக கேரளா அமைச்சரை வைத்து முல்லைப்பெரியாறு அணையில் மதகுகளை திறந்து தண்ணீரை கேரளா கடலுக்குள் வெளியேற்றி கேரளா அரசிற்கு தன் விசுவாசத்தைக் காட்டி தமிழக உரிமையை விட்டுக்கொடுத்திருக்கிறது திமுக அரசு.

தேனி மாவட்ட ஆட்சியரும்,தமிழக அமைச்சரும் செய்ய வேண்டிய பணியை தமிழக வரலாற்றில் இல்லாத வகையில் திருடன் கையில் சாவியைக் கொடுத்தது போல, கேரள அரசின் கையில் முல்லைப்பெரியாறு அணையைக் கொடுத்து தமிழக விவசாயிகளை வஞ்சித்துவிட்டது திமுக அரசு.

எங்கே போயின? காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திக உள்ளிட்ட கட்சிகள். எங்கு போனது இவர்கள் தமிழ்நாட்டின் உரிமை மீட்பு போராட்டம். இதுவரை தமிழக முதல்வர் இதற்குரிய பதிலளிக்கவில்லை.

எனவே தமிழக பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் விவசாயிகளை ஒன்றுதிரட்டி வரும் நவம்பர் 8-ம் தேதி காலை 11 மணிக்கு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப்போராட்டம் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Farmer Team State President GK Nagaraj Announce Nov 8 Protest at Theni


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal