பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கும் சிறையில் மிரட்டல்.!!
BJP Amar Prasadh Reddy threatened to quit politics
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்பு அனுமதியின்றி நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்ட பாஜக கொடி கம்பத்தை அகற்ற சென்ற வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் ஆனபாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் ஜாமின் வழங்க கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அமிர் பிரசாத் ரெட்டி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அந்த மனுவில் "சம்பவம் நடைபெற்ற போது அந்த இடத்தில் நான் இல்லை. அரசியல் உள்நோக்கத்தோடு என் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்டு நீதிமன்றம் விடுமுறைக்கு முன்னர் கைது செய்யப்பட்டேன்.
2,000 விசாரணை கைதிகள் அடக்க வேண்டிய இடத்தில் 2,910 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். 500 பேருக்கு ஒரு சமையலறை என்று இல்லாமல் அனைவருக்கும் சேர்த்து ஒரே சமையல் அறையில் தான் உள்ளது. 10 கைதிகளுக்கு ஒரு கழிவறை என்ற விதியை மீறி 120 கைதிகள் ஒரே கழிவறையை பயன்படுத்தி வருகின்றனர்.
என்னை அரசியல் இருந்து வெளியேறுமாறு உயர் அதிகாரிகள் மிரட்டுகின்றனர்" என அந்த மனுவில் குற்றம் சாட்டியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழ்நாடு காவல்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நவம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
English Summary
BJP Amar Prasadh Reddy threatened to quit politics