நான் சொன்னது சட்டப்படி சரி... சுடுகாடு எடுத்ததில் தவறு இல்லை...! - ரகுபதி - Seithipunal
Seithipunal


திருப்பரங்குன்றம் வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கிய தீர்ப்பை அடுத்து, அமைச்சர் ரகுபதி சர்ச்சையான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது,"திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பேய் கதை அரசு அவிழ்த்துவிடும் என்று நீதிமன்றம் கூறுகிறது.

அதைக் கவனித்துப் பார்த்து நான் சுடுகாடு என்ற உதாரணத்தைத் திருப்பி சொன்னேன். இதில் தப்பில்லை.

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் எந்த கருத்தும் நான் கூறவில்லை. அனைத்து பேச்சும் சட்டத்திற்கு உட்பட்டு நடந்தது.முந்தைய தீர்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு, வழக்கறிஞராகிய எனக்கும், அதனை சுட்டிக்காட்டும் உரிமை உண்டு.

திருப்பரங்குன்றம் கல் தூணில் தீபம் ஏற்றப்பட்டதற்கான ஆதாரம் உள்ளதா என்று கேட்கிறோம்; அதனை சமர்பிப்பது வழக்கை தொடரும் நபரின் பொறுப்பு.

ரகுபதி இந்த கருத்துக்களை நிகழ்நிலையில் நடந்த பேச்சில், சட்டவழியில் உரிமை உள்ளதை விளக்கி, “பேய் இருக்கிறது என்று கூறுவது தவறு அல்ல, அதற்காக உதாரணமாக சுடுகாடு எடுத்தேன் என விளக்கினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What I said legally correct there nothing wrong acquiring land crematorium Ragupathy


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->