இன்று பஞ்சாப் மாநில முதலமைச்சராக பகவந்த் மான் பதவியேற்பு.!! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநில முதலமைச்சராக இன்று பகவந்த் மான் பதவியேற்கிறார். 

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. முதலமைச்சராக பகவான் இன்று பதவியேற்கிறார். கடந்த முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை படுதோல்வி அடைய செய்து ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலம் சங்ரூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்பி ஆக பகவந்த் மான் தேர்வானார். தற்போது பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் தூரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இன்று முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், தனது எம்பி பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

முதலமைச்சர் பதிவியேற்பு விழாவில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார். பஞ்சாப் மக்கள் திரளாக பங்கேற்கும்படி தூரி அழைப்பு விடுத்துள்ளதாக சுமார் 5 இலட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பகத்சிங் பிறந்த ஊரான கட்கர் கலன் பகுதியில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bhagwant mann cm for punjab


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->