மக்களின் உயிருக்கு உலை வைக்காதீர்கள்... தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு அறப்போர் இயக்கம் கண்டனம்!
arapor iyakkam condemn to tvk and tvk govt
அறப்போர் இயக்கம் விடுத்துள்ள கண்டன செய்தியில், மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டுமா? அவர்களுக்கு நல்லது செய்யுங்கள். இது போன்ற சமூக விரோத செயல்களை செய்து அவர்கள் உயிருக்கு உலை வைக்காதீர்கள்.
இது போன்ற பேனர்கள், கொடி கம்பங்கள் வைக்கும் போது மேலே செல்லும் மின்சார வயர்கள் பட்டு உயிரிழந்தவர்கள் ஏராளம். இது போல சாலை ஓரங்களில் நடைபாதைகளில் வைக்கப்படும் பேனர்கள் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுந்து அதில் உயிரிழந்தவர்கள் ஏராளம். இத்தனை நடந்துமா அறிவு வரவில்லை..?
அனுமதி வாங்காமல் சட்ட விரோதமாக பேனர்கள் வைத்து மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுப்பதே இதற்கு தீர்வு. என்ன செய்ய போகிறீர்கள்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
arapor iyakkam condemn to tvk and tvk govt