திமுக நீட் கையெழுத்து இயக்கத்திற்கு எதிராக முறையீடு!!
Appeal in MadrasHC against DMK NEET signature drive
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என திமுக சார்பின் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் 50 நாட்களில் 50 லட்சம் பேரிடம் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து பெறும் வகையில் இந்த இயக்கமானது தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த இயக்கம் தொடங்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் திமுகவின் தேர்தல் நாடகம் என கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுகவின் நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கத்திற்கு எதிராக முறையிடப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முறையீட்டு மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து அவசர பொதுநல வழக்காக விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் எம்.எல் ரவி என்பவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து அவசர வழக்காக விசாரிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தலைமை நீதிபதியின் அமர்வின் முன்பு அடுத்த வாரம் முறையிடும் படியும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
English Summary
Appeal in MadrasHC against DMK NEET signature drive