எம்.ஆர் விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் சோதனை.! சிக்கிய ஆவணங்கள்.! வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சாதனை காரணமாக எம் ஆர் விஜயபாஸ்கர் வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். பாதுகாப்பு பணிக்காக போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றியது. அதே சமயத்தில், ஆளும் கட்சியாக இருந்த அதிமுக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சியாக உள்ளது.

மேலும், இந்த தேர்தலில் அதிமுகவின் அமைச்சர்கள் பலரும் தோல்வி அடைந்துள்ளனர். அதேசமயத்தில் ஆட்சி அமைத்துள்ள திமுக, அதிமுக அமைச்சர்கள் முறைகேடு செய்ததாக கூறப்படும் புகார்கள் குறித்து விசாரணை நடத்துவதில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், சமூக வலைதளங்களில் திமுக குறித்தும், திமுக தலைவர்கள் குறித்தும் அவதூறாக பேசியவர்களை உடனடியாக கைது செய்யும் நடவடிக்கையில் திமுக இறங்கியுள்ளது. குறிப்பாக சாட்டை துரைமுருகன், கிஷோர் கே சாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்,

இந்த நிலையில், கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வீட்டில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூரில் உள்ள எம் ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 20 இடங்களிலும், சென்னையில் உள்ள ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

சோதனை குறித்து வெளியான முதல் கட்ட தகவலின்படி, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது எம் ஆர் விஜயபாஸ்கர் முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரை அடுத்து இந்த சோதனையை நடைபெறுவதாக தெரிகிறது.

மேலும், சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 100 க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

anti corruption rain in MR VIJAYA BASHAR home


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->