திடீர் திருப்பம்! திமுகவோடு கைகோர்க்க தயார்! பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


திமுகவுக்கும் பாஜகவுக்கும் கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் சமீபத்தில் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதான தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

நாடு முழுவதும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டனம் பலத்து வரும் நிலையே பாஜக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. மேலும் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பிரபலங்கள் உட்பட 262 பேர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இத்தகைய பரபரப்பான சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது என் மண் என் மக்கள் நடை பயணத்தின் 2வது கட்டத்தினை தொடங்கியுள்ளார். அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் இருந்து இந்த நடைபயணத்தை தொடங்கிய அண்ணாமலை பொதுமக்கள் மத்தியில் பேசிய போது "9 ஆண்டுகளில் நமது நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் மது விற்பனை, அரிவாள் கலாச்சாரம், கனிம வள கொள்ளை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மது கடை ஒழிப்பு, வறுமை ஒழிப்பு என்று கூறினால் நாங்கள் திமுகவோடு கைகோர்க்க தயார். ஆனால் சனாதன கொள்கையை ஒழிக்க நினைத்தால் சேர மாட்டோம்" என பேசி உள்ளார். திமுகவுடன் கைகோர்க்க தயார் என அண்ணாமலை பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai said that he is ready to join with DMK


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->