கோவிலுக்கு முன் பெரியார் சிலை இருக்க கூடாது.!! - அண்ணாமலை திட்டவட்டம்.!!
Annamalai said Periyar statue must remove front of temple
சென்னை தியாகராய நகரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தபோது பெரியார் சிலையை புது இடத்தில் வைத்து போற்றிக் கொள்ளட்டும், கோவில் முன்வைக்க கூடாது என மீண்டும் பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
மேலும் பேசிய அவர் ஸ்ரீரங்கம் கோவில் முன்பு பெரியார் சிலையை வேறு இடத்தில் வைப்பதே பாஜகவின் தேர்தல் வாக்குறுதி. திமுக மற்றும் காங்கிரஸ் பற்றி பெரியார் கூறிய கருத்துக்களை அந்த கட்சியின் அலுவலகங்கள் முன்பு வைக்க முடியுமா?

தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையை எதிர்ப்பதற்கான காரணம் என்னிடம் உள்ளது. அறநிலையத்துறை இருக்கக் கூடாது என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு. தமிழக முழுவதும் ரூ. 5,344 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டதாக அமைச்சர் கூறுகிறார்.
நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் எத்தனை சொத்துக்களை அவர்கள் மீட்டு விட்டனர். நீதிமன்றம் உத்தரவிட்டதால் கட்டாயம் மீட்க வேண்டும் என்ற நிலை உருவாகிய போது தான் சொத்துக்களை மீட்டார்கள். அறநிலை துறை ஒரு தலை பட்சமாக செயல்படுகிறது என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
English Summary
Annamalai said Periyar statue must remove front of temple