திமுகவில் சாதி பாகுபாடு! ஆனால் நாங்க அப்படி இல்ல! பட்டியலிடும் அண்ணாமலை!
Annamalai accused DMK had caste discrimination
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பயணம் இன்று தேனி மாவட்டத்தில் அல்லிநகரம், பழைய பேருந்து நிலையம் வழியாக பங்களா மேடு வரை நடைபெறும் சென்ற அண்ணாமலை திறந்த வெளி வாகனத்தில் மக்கள் மத்தியில் பேசினார்.
அப்போது பேசிய அவர் "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் 79 பேரில் 20 பேர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள், 11 பேர் பெண்கள், அவ்வாறு பார்த்தால் 25 சதவீதம் பட்டியலின மக்களுக்கு அமைச்சரவை ஒதுக்கப்பட்டது.

ஆனால் தமிழ்நாட்டை ஆளும் திமுக அமைச்சரவையில் மத்த புள்ள 35 அமைச்சர்களில் 3 பேர் மட்டுமே பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள். திமுக மாவட்ட செயலாளர் பதவி கூட சாதி பார்த்து தான் நியமிக்கிறார்கள். அவர்கள் கட்சிக்குள்ளேயே சாதி பாகுபாடு உள்ளது. முதலில் அவர்கள் கட்சிக்குள்ளே இருக்கும் சாதி பாகுபாட்டை ஒழிக்க வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்கள் குடும்பம் மட்டுமே வளம் பெறும், தலைமுறை தலைமுறைகளுக்கும் குடும்பத்தினரே பொருளாதார வளர்ச்சி அடைகின்றனர். இவர்களால் யாருக்கும் எந்த பயனும் கிடைப்பதில்லை" என திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
Annamalai accused DMK had caste discrimination