அமித்ஷா தமிழகம் வருகை! தென் சென்னை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை! - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்து தமிழக பாஜகவின் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்க தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார். 

கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி இருந்த அவரை தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், திரை பிரபலங்கள் சென்று சந்தித்து பேசினர்.

பின்னர், இன்று காலையில் சென்னை கோவிலம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பற்றி தமிழக பாஜக தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு செயல்பாடுகள் குறித்து அமித்ஷா தொண்டர்களிடையே பேசினார்.

அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் வேலூர் சென்றடைந்தார். வேலூரில் பாஜக சார்பில் நடக்கவிருக்கும் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேச இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amit Shah visits Tamil Nadu Consultation with South Chennai block administrators


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->