தமிழகம் வருகிறார் அமித்ஷா...வேவேககமாக நடக்கும் வேலைகள்! பரபரப்பான பாஜக தலைகள்!
Amit Shah is visiting Tamil Nadu preparations are proceeding at a rapid pace BJP leaders are abuzz with activity
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் புதுச்சேரி மற்றும் தமிழகம் என இரண்டு நாள் பயணமாக வருகிறார். அவரது பயணத்தை முன்னிட்டு இரு மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 8-ஆம் தேதி புதுச்சேரி செல்லும் அமித்ஷா, கோரிமேடு காவல் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, புதுச்சேரி காவல்துறைக்கு குடியரசுத் தலைவர் வழங்கும் 'President's Colours' விருதை வழங்குகிறார்.
அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 9-ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், பின்னர் திருவண்ணாமலைக்கு சென்று பகவான் ஸ்ரீ ரமணர் ஆசிரமத்தில் சிறப்பு பூஜையில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் பயணத்தின் போது தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், பாஜக அமைப்பு செயல்பாடுகள் மற்றும் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்துவார் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக பாஜக எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சித் தலைவர்களை டெல்லியில் அழைத்து அமித்ஷா ஆலோசனை நடத்தியிருந்தார். அதன் பின்னர் அவர் முதன்முறையாக தமிழகம் வருவதால், இந்தப் பயணம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளதாகக் கருதப்படுகிறது.
மேலும், புதுச்சேரியில் அங்குள்ள அரசியல் நிலவரம் மற்றும் அமைச்சரவை தொடர்பான விவகாரங்கள் குறித்தும் அவர் ஆலோசனை நடத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள சந்திப்பில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் தேர்தல் தோல்விக்குப் பிறகான கட்சி மறுசீரமைப்பு, அமைப்பு வலுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
அமித்ஷாவின் இந்த இரண்டு நாள் பயணம் தமிழக மற்றும் புதுச்சேரி அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
English Summary
Amit Shah is visiting Tamil Nadu preparations are proceeding at a rapid pace BJP leaders are abuzz with activity