அமித்ஷா என்ட்ரி.. பிரேமலதா ஆலோசனை! அதிமுகவுக்கு இண்டிகேட்டர் போட்டு.. தவெக பக்கம் திருப்பும் தேமுதிக? - Seithipunal
Seithipunal


2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பல அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணி நிலைப்பாடுகளை ஓரளவு தெளிவுபடுத்தியுள்ள நிலையில், இன்னும் இறுதி முடிவை அறிவிக்காமல் இருக்கும் ஒரே பெரிய கட்சி தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் (தேமுதிக) தான். இதனிடையே, ஜனவரி 9ஆம் தேதி நடைபெற உள்ள மாநில மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்போம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பை முன்னிட்டு, இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் பிரேமலதா விஜயகாந்த் முக்கிய ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கூட்டத்தில், கூட்டணி தொடர்பான இறுதி முடிவுக்கு ஒரு தெளிவு கிடைக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

2026 தேர்தல் களம் மெல்ல மெல்ல சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளும் திமுகவும், முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவும் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றன. திமுக கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இக்கூட்டணியில் தற்போது முக்கியமாக தொகுதி பங்கீடு மட்டுமே இறுதி செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளது. “ஆட்சியில் பங்கு” என்ற கோஷம் எழுந்தாலும், இறுதி முடிவு திமுக தலைமையிடமே இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மறுபுறம், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, தமாகா, ஐஜேகே போன்ற கட்சிகள் உள்ளன. மேலும், பாமகவும் இந்தக் கூட்டணிக்குத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் அதிமுக–பாஜக–பாமக கூட்டணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

இந்தச் சூழலில், கடந்த காலங்களில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக, தற்போது தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்து வருகிறது. திமுகவும் அதிமுகவும் தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்திருந்தாலும், தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக அமையாததால் முடிவு தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், தேமுதிக திமுக, அதிமுக மற்றும் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) ஆகிய மூன்று முக்கிய அரசியல் அணிகளுடனும் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. எந்தக் கட்சி அதிக தொகுதிகளை வழங்குகிறதோ, அதனுடன் தேமுதிக கூட்டணி செல்லும் என்ற கருத்தும் நிலவுகிறது.

ஜனவரி 9ஆம் தேதி நடைபெற உள்ள மாநில மாநாட்டில் கூட்டணி குறித்த இறுதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான முன்னோட்டமாக நடைபெறும் இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தமிழகம் வந்துள்ளார். இன்று நடைபெறும் மோடி பொங்கல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். அமித்ஷா டெல்லி திரும்புவதற்கு முன், தேமுதிக கூட்டணி தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் நடைபெறலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளதால், தேமுதிக முடிவு விரைவில் வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amit Shah entry Premalatha advice Putting an indicator on AIADMK Will DMDK turn to Tvk


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->