பல்லவ, சோழ, பாண்டியர் வரலாறுகள் எங்கே? அது நடந்தால் தான், உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.! - Seithipunal
Seithipunal


சோழர், பாண்டியர், பல்லவர்கள் குறித்து வரலாற்று ஆசிரியர்கள் கவனம் செலுத்தாதது ஏன்? - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி.!

நேற்று டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சோழர், பாண்டியர், பல்லவர்கள் குறித்து வரலாற்று ஆசிரியர்கள் கவனம் செலுத்தாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய விவரம் பின்வருமாறு,

"நம் நாட்டில் பல்வேறு மன்னர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். ஆனால், முகலாயர்கள் குறித்து மட்டுமே வரலாற்று ஆசிரியர்கள் அதிக புத்தகங்களை எழுதியுள்ளனர். 

பல்லவர்கள் 600 ஆண்டு, சோழர்கள் 600 ஆண்டுகள், பாண்டிய மன்னர்கள் 800 ஆண்டுகள் ஆட்சி, அசாமை சேர்ந்த அகோம் பேரரசு 650 ஆண்டு ஆட்சி புரிந்துள்ளனர்.

மவுரிய பேரரசு ஆப்கானிஸ்தான் முதல் இலங்கை வரை 550 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. சாதவாகனர்களின் ஆட்சி 500 ஆண்டு, குப்தர்கள் ஆட்சி 400 ஆண்டு நீடித்தது. 

ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்க கனவு கண்ட குப்த வம்சத்தை சேர்ந்த சமுத்திர குப்தர், 
மராட்டிய மன்னர் சிவாஜி, முகலாயர்களுக்கு எதிராக தீரத்துடன் போராடினார், 
ராஜஸ்தானின் மேவார் பகுதி மன்னர் பப்பா ராவல், இந்தியாவுக்குள் நுழைய முயன்ற முகலாயர்களை தோற்கடித்து விரட்டி அடித்தார். இவர்கள் குறித்து எந்த புத்தகமும் எழுதப்படவில்லை.

நம் நாட்டில் ஆட்சி புரிந்த பழங்கால மன்னர்கள் குறித்து வரலாற்று ஆசிரியர்கள் கவனம் செலுத்தாதது ஏன்? இனியாவது அவர்கள் குறித்து அதிக புத்தகங்களை எழுத வேண்டும். அது நடந்தால் தான், நாம் நம்பி கொண்டிருக்கும் பல வரலாறுகள் தவறு என்பது புரியும். உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். இதற்கான பணிகளை வரலாற்று ஆசிரியர்கள் இப்போதே தொடங்க வேண்டும்" என்று அமித் ஷா அந்த நிகழ்ச்சியில் பேசினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

amit sha say about missing indian history


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->