தமிழகத்தில் மதுவிலக்கு அமல்?....திருமாவளவன் கூறிய தகவல் இதோ! - Seithipunal
Seithipunal


விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், குஜராத், பீகார் மாநிலங்களில் மதுவிலக்கு இருக்கும்போது தமிழ்நாட்டில் ஏன் இருக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பினார். 

அனைத்துக் கட்சிகளும் மதுவிலக்கில் உடன்பாட்டுடன் இருக்கும் நிலையில் கடைகளை மூடுவதில் என்ன சிக்கல் இருக்கிறது என்றும்,  மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் பிற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக இருக்க வேண்டும் என்று கூறினார். 

மேலும், மது ஒழிப்பு மாநாட்டை கூட்டணிக் கணக்குடன் இணைத்துப் பார்க்க வேண்டாம் என்று பேசிய அவர், மது ஒழிப்பு மாநாட்டில் லட்சக்கணக்கான மகளிரை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளதாகவும், விடுதலை சிறுத்தை கட்சி மாநாட்டில் கட்சிகள் வரம்புகளை கடந்து அனைவரும் ஒரே குரலில், ஒருமித்த குரலில் ஜனநாயக அடிப்படையில் கட்சியினர் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும், தேர்தலுக்கான அரசியல் நிலைப்பாடு என்பது வேறு என்று தெரிவித்தார். 

தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் மது விலக்கை ஆதரிப்பதாக கூறிய அவர்,  24 மணி நேரமும் கட்சி சார்ந்த நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்றும், திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

மதுவிலக்கு திமுகவிற்கும் உடன்பாடான கருத்துதான் என்றும், திமுகவிற்கு முரணான கருத்தை நாங்கள் சொல்லவில்லை. மக்களின் கோரிக்கையை நான் முன்வைக்கிறேன் என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Alcohol Prohibition in Tamil Nadu Here is the information given by Thirumavalavan


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->