அடேங்கப்பா!!! எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் இன்று அதிமுக செயற்குழு கூட்டம்...!
AIADMK working committee meeting today under leadership Edappadi Palaniswami
அரசியல் கட்சியின் விதிப்படி,'இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2 முறை செயற்குழு கூட்டத்தையும், ஒரு முறை பொதுக்குழு கூட்டத்தையும் நடத்த வேண்டும்'.அவ்வகையில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் 'எடப்பாடி பழனிசாமி' தலைமையில், அ.தி.மு.க செயற்குழு கூட்டம் இன்று அதாவது வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், எம்எல்ஏ.க்கள், கட்சி எம்.பி.க்கள், தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிற மாநில கழக செயலாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர்.மேலும், கூட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதில் பெரும்பாலான தீர்மானங்கள் தி.மு.க ஆட்சிக்கு எதிராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாஜகவுடன் மீண்டும் அதிமுக ஏன் கூட்டணி வைத்தது என்பது குறித்து செயற்குழு உறுப்பினர்கள் மத்தியில் 'எடப்பாடி பழனிசாமி' விளக்கம் அளிக்கவுள்ளதாகவும், பாஜகவுடன் கூட்டணி வைக்கப்பட்டதை ஏற்காத மூத்த மற்றும் கடைநிலை நிர்வாகிகளிடம் பழனிசாமி கருத்து கேட்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து 2026 சட்டசபை தேர்தலில் அதிமுகவினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளன.
மேலும், அதிமுக - பாஜக கூட்டணி அமைந்த பின்னர், நடைபெறும் முதல் செயற்குழுக் கூட்டம் என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
English Summary
AIADMK working committee meeting today under leadership Edappadi Palaniswami