மே 7 தேதி உள்ளூர் விடுமுறை - எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?
coming may 7 local holiday to thanjavur district
உலக அதிசயங்களில் ஒன்றான தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா மிகப்பிரம்மாண்டமாக கொண்டாடப்படும். அதன் படி இந்த ஆண்டும் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கியுள்ளது. மொத்தம் 18 நாட்கள் நடைபெறும் இந்த விழா காலத்தில், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சாமி புறப்பாடு மற்றும் திருமுறை இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 7ம் தேதி நடைபெறவுள்ளது. காலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் தேர் இழுக்கப்பட்டு, தஞ்சையின் நான்கு ராஜவீதிகளில் வலம் வரும். நூறாண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் மற்றும் மிகவும் புகழ்பெற்ற இந்த தேரோட்ட நிகழ்வுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை இழுத்துச் செல்வார்கள்.
இந்த நிலையில், இந்த சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு மே 7ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரியங்கா அறிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறைக்குப் பதிலாக மே 24ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
English Summary
coming may 7 local holiday to thanjavur district