சீமானுக்கு எதிரான வழக்கு - இடைக்காலத் தடை நீடித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு.!!
supreme court extend interim stay seeman case
பிரபல நடிகை விஜயலெட்சுமி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் ரீதியாக ஏமாற்றிவிட்டதாக கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸில் புகார் அளித்தார்.
அதன் படி போலீஸார் சீமான் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி சீமான் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது என்று மறுப்பு தெரிவித்தார்.
மேலும், சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கில் 12 வார காலத்துக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென வளசரவாக்கம் போலீஸாருக்கு உத்தரவிட்டு சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில் இன்று, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் மீதான பாலியல் வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தனர்.
மேலும், சிமானின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க நடிகைக்கும் தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 31ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
English Summary
supreme court extend interim stay seeman case