பாஸ்ட் புட் தலைவர்களும்! ரவுடிகளின் கூடாரமும்.!! பாஜகவை ரவுண்டு கட்டிய செல்லூர் ராஜூ!!
AIADMK SellurRaju criticized all rowdies in TN BJP
மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மகபூப்பாளையத்தில் அதிமுகவின் 52 வது ஆண்டு துவக்க விழா மற்றும் அதிமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர் "அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பாரபட்சமின்றி வழங்கப்பட்டது.

ஆனால் திமுக அனைவருக்கும் ரூ.1,000 கொடுக்கப்படும் என அறிவித்துவிட்டு தற்போது அல்வா கொடுத்துள்ளது. திமுக ஆட்சி அமைந்தால் தமிழகத்தில் ஒரு சொட்டு மது கூட இருக்காது என தெரிவித்தனர். ஆனால் பாட்டிலுக்கு 10 ரூபாய் கமிஷன் வைத்து விற்பனை செய்வது திமுக தான். அதனை தொடங்கி வைத்தவர் அமைச்சர் செந்தில் பாலாஜி தான், தற்போது அதை அமைச்சர் முத்துசாமி தொடர்ந்து வருகிறார். இந்த பணம் எங்கே செல்கிறது என தெரியவில்லை.

பாஜகவுக்கு தமிழகத்தில் பாஸ்ட் புட் தலைவர்கள் உருவாகி வருகின்றனர். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து ரவுடிகளும் இன்று பாஜகவில் தான் உள்ளனர். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம், அதற்கு எந்த அளவுகோலும் இல்லை. மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் தமிழகம் முன்மாதிரியாக இருக்கிறது என தெரிவித்துள்ளது. எனவே எடப்பாடியார் பிரதமராக முழு தகுதியும் கொண்டவர்" என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.
English Summary
AIADMK SellurRaju criticized all rowdies in TN BJP