அதிமுக ரகுபதியை அமைச்சராக்கி அழகு பார்த்தது... திமுக கொத்தடிமையாக்கி விட்டது...!- EPS
AIADMK saw beauty in making Raghupathi a minister DMK has made him a slave EPS
சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் பொதுச்செயலாளர் ''எடப்பாடி பழனிசாமி'' செய்தியாளர்களை சந்தித்தார்.

எடப்பாடி பழனிசாமி:
அப்போது அவர் தெரிவித்ததாவது,"நான் விழித்து கொண்டு சிறப்பாக செயல்படுவது அமைச்சர் ரகுபதியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.தி.மு.க.வின் கொத்தடிமையாக செயல்படுகிறார் அமைச்சர் ரகுபதி.ரகுபதியை அமைச்சராக்கி அழகு பார்த்தது.
அ.தி.மு.க.அமைச்சர் ரகுபதி கும்பகர்ண தூக்கத்தில் உள்ளார்.தமிழகத்தில் அரசும், காவல்துறையும் தூங்கிக்கொண்டிருக்கிறது.தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு கெட்டு நாசமாகிவிட்டது.
இருசக்கர வாகனத்தை தொலைத்துவிட்டு புகார் கொடுத்த பெண், காவலர் ஒருவரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.காவலர் மீது பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகார் தொடர்பான வீடியோவை சுட்டிக்காட்டி புகார்.
தி.மு.க. ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை, அவரவர் தான் அவர்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பு.நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் என்ன என்றே தெரியாத முதலமைச்சர்.தி.மு.க. ஆட்சியின் அவலங்களை மக்களிடம் கொண்டு செல்ல அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளேன்" எனத் தெரிவித்தார்.
English Summary
AIADMK saw beauty in making Raghupathi a minister DMK has made him a slave EPS