பாகிஸ்தானின் லாகூர் வான் பாதுகாப்பு அமைப்பை முற்றிலுமாக அழித்த இந்தியா!
india pakistan Operation Sindoor details update
பாகிஸ்தான் திட்டமிட்டு இந்தியாவின் 15 ராணுவ இலக்குகளை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்க முயன்ற நிலையில், இந்திய ராணுவம் அந்த முயற்சிகளை வெற்றிகரமாக தடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மேற்கொண்ட பதிலடி தாக்குதலில் லாகூரில் அமைந்த ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா இன்று காலை பாகிஸ்தானின் பல வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்து தாக்கியது. லாகூரில் உள்ள முக்கிய அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டதாக உறுதியாகத் தகவல் கிடைத்துள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தர் மற்றும் ரஜோரி பகுதிகளில் பாகிஸ்தான் கனரக பீரங்கிகள் மற்றும் மோர்டார்களை பயன்படுத்தி சூட்டுத் தாக்குதலை அதிகரித்தது. இந்தியா அதற்கும் கடும் பதிலடி வழங்கியுள்ளது.
மே 7ஆம் தேதி இரவு, அவந்திபுரா முதல் பூஜ் வரை உள்ள பல ராணுவ முகாம்களை தாக்க பாகிஸ்தான் முயன்ற நிலையில், இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை முறியடித்து விட்டன. இந்தச் சூழ்நிலையில், பாகிஸ்தானின் தாக்குதலில் 16 பொதுமக்கள், அதில் மூன்று பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் உள்பட, உயிரிழந்துள்ளனர்.
English Summary
india pakistan Operation Sindoor details update