மது பழக்கமே இல்லாதவர் மீது பொய் வழக்கு போட்ட கடலூர் போலீஸ்! ரூ.1 லட்சம் இழப்பீடு!
Cuddalore Police Fake case
குடிப்பழக்கம் இல்லாத ஒருவருக்கு மது அருந்தி வாகனம் ஓட்டியதாக பொய்யான வழக்கு பதிவு செய்த போலீசார் மீது மாநில மனித உரிமை ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடலூரைச் சேர்ந்த வைத்தியலிங்கம் என்ற நபர் மீது, போலீசார் உண்மையில்லாத குற்றச்சாட்டை முன்வைத்து, "மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டினாரென்று" வழக்கு பதிவு செய்தனர். அவருக்கு குடிப்பழக்கம் இல்லாதது பின்னர் உரிய சோதனைகளில் நிரூபிக்கப்பட்டது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட வைத்தியலிங்கம் மனத்துன்பம் சந்தித்ததாகக் கூறி மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.
இதனை விசாரணை நடத்திய மாநில மனித உரிமை ஆணையம், அவரது உரிமைகள் மீறப்பட்டுள்ளன எனத் தீர்மானித்து, தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் இழப்பீட்டை வழங்க உத்தரவிட்டது.
மேலும், இழப்பீட்டு தொகையை பொய்வழக்கு பதிவு செய்த கடலூர் முதுநகர் காவல் ஆய்வாளர் ஏழுமலை மற்றும் காவலர் சுதாகர் ஆகியோரிடமிருந்து வசூலிக்குமாறும் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்த தீர்ப்பு, பொறுப்பற்ற போலீசாரின் செயல்களை அம்பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
English Summary
Cuddalore Police Fake case