'குண்டர் சட்டத்தில் சிறை: 'ஏர்போர்ட்' மூர்த்தியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையிலான மோதலில் கொலை முயற்சி செய்த வழக்கில் புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் 'ஏர்போர்ட்' மூர்த்தி கைது செய்யப்பட்டார். இவரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

‘ஏர்போர்ட்' மூர்த்தி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு எதிராக கருத்து பதிவு செய்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 06 ஆம் தேதி, சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழக டி.ஜி.பி. அலுவலக நுழைவுவாயில் அருகே அவரை விடுதலை சிறுத்தை கட்சியினர் தாக்கியதோடு, செருப்பால் அடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். 

பதிலுக்கு 'ஏர்போர்ட்' மூர்த்தியும் சிறிய கத்தி கொண்டு, தன்னை தாக்கிய விசிகவினர் மீது பதில் தாக்குதல் நடத்தினார். இதுதொடர்பாக இரு தரப்பினரும் மீதும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 'ஏர்போர்ட்' மூர்த்தியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாக மனுவில் ஏர்போர்ட் மூர்த்தி தெரிவித்திருந்த நிலையில், ஏற்கனவே குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளதாகக் கூறி, அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Chennai Principal Sessions Court has rejected the bail plea of ​​Airport Murthy


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->