நாளை 10 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்..சென்னை மாநகராட்சி தகவல்!
Stalins project camp with you in 10 wards tomorrow Info from the Chennai Corporation
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது என்று சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கி வைத்தார்.அந்தவகையில் 02.08.2025 அன்று பெருநகர சென்னை மாநகராட்சியில் முதல் மருத்துவ முகாமினை தேனாம்பேட்டை மண்டலம், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மண்டலத்திற்கு ஒரு மருத்துவ முகாம் வீதம் முதற்கட்டமாக 02.08.2025 அன்று சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில், இரண்டாம் கட்டமாக 23.08.2025 அன்று ஆலந்தூர் மண்டலம், ஏ.ஜெ.எஸ். நிதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நான்காம் கட்டமாக 30.08.2025 அன்று நடைபெற்றது .
இந்தநிலையில் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை திருவொற்றியூர் மண்டலம், வார்டு-5ல் எண்ணூர் விரைவு சாலையில் உள்ள படவேட்டம்மன் கோவில் திறந்தவெளி இடம், மணலி மண்டலம் , வார்டு-17ல் வடபெரும்பாக்கம், எம்.ஆர்.எச். சாலையில் உள்ள சமுதாயக் கூடம், இராயபுரம் மண்டலம் , வார்டு-51ல் காளிங்கராயன் தெருவில் உள்ள அண்ணா திருமண மண்டபம், திரு. வி.க. நகர் மண்டலம் , வார்டு-72ல் புளியந்தோப்பு, டி'காஸ்டர் சாலையில் உள்ள டான் பாஸ்கோ, அம்பத்தூர் மண்டலம் , வார்டு-91ல் முகப்பேர் மேற்கு,
மோகன்ராம் நகர், வெள்ளாளர் தெருவில் உள்ள சுப்ரபா மஹால், அண்ணாநகர் மண்டலம், வார்டு-100ல் செனாய் நகர், டி.பி. சத்திரம் பிரதான சாலையில் உள்ள அண்ணா சமூக கூடம், தேனாம்பேட்டை மண்டலம் , வார்டு-113ல் தியாகராயநகர், அபிபுல்லா சாலையில் உள்ள எஸ்.ஜி.எஸ் சபா, கோடம்பாக்கம் மண்டலம் வார்டு-135ல் அசோக் நகர், 1வது அவென்யூவில் உள்ள லட்சுமி மஹால், பெருங்குடி மண்டலம், வார்டு-181ல் கொட்டிவாக்கம், ஏ.ஜி.எஸ். பிரதான சாலையில் உள்ள கபடி மைதானம், சோழிங்கநல்லூர் மண்டலம் , வார்டு-192ல் நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்சன் சென்டர் ஆகிய 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Stalins project camp with you in 10 wards tomorrow Info from the Chennai Corporation