பெரம்பலூரில் பெரும் சோகம்: கணவர் இறந்த துக்கம்: 06 மாத குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்..! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் அருகே கணவர் இறந்த துக்கத்தில் இருந்த மனைவி தனது 06 மாத குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூரை அடுத்த தெரணி கிராமத்தை சேர்ந்தவர் நீலகண்டன். இவரது மனைவி கவிதா 24 வயது. இவர்களுக்கு கடந்த 03 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது. தம்பதிக்கு 06 மாத வள்ளுவன் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீலகண்டன் பனை மரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் அவரது முதுகு  தண்டுவடத்தில் காயம் ஏற்பட்ட்டுள்ளது.

இதனையடுத்து பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தும்  குணமாகவில்லை. இதனால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட்டுள்ளார். இதையடுத்து தெரணியில் உள்ள அண்ணன் வீட்டிற்கு சென்ற கவிதா, தனது மகனுடன் வசித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் இன்று மதியம் வீட்டில் தனியாக இருந்த கவிதா, வீட்டை உட்புறமாக தாழிட்டு கொண்டு குழந்தையுடன் உடலுக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் கதறி கூச்சலிட்ட நிலையில், சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து, 2 பேரையும் மீட்டுள்ளனர். ஆனால் கவிதா உடல் முழுவதும் கருகிய நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

06 மாத கை குழந்தைக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பாடாலூர் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தியுள்ளார்.

விசாரணையில் கணவர் இறந்த துக்கத்தில் கவிதா, மகனுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பாடாலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அக்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A young woman committed suicide by setting herself on fire with her 6 month old baby near Perambalur grieving over the death of her husband


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->