'விஜய்க்கு அரசியல் தெரிந்திருந்தால் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' பற்றி தெரிந்திருக்கும்: நயினார் நாகேந்திரன்..! 
                                    
                                    
                                   If Vijay knew politics he would have known about One Nation One Election says Nayinar Nagendran
 
                                 
                               
                                
                                      
                                            அதிமுகவில் ஜனநாயகம் உள்ளதால் எல்லோரும் டெல்லி செல்கிறார்கள் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது நயினார் நாகேந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் பேசியதாவது:
யார் முதல்வராக வந்தாலும் ஏற்போம் என்று அமித்-ஷா முன்னிலையில் தினகரன் கூறினார். ஆனால், தற்போது எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம் என கூறுகிறார். அதிமுகவில் ஜனநாயகம் உள்ளதால் எல்லோரும் டெல்லி செல்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தில் உள்ள நன்மைகளை விஜய் புரிந்து கொள்ள வேண்டும். விஜய்க்கு அரசியல் தெரிந்திருந்தால் ஒரே நாடு, ஒரே தேர்தல் பற்றி அவருக்கு தெரிந்திருக்கும் என்று கூறியுள்ளார். 
மேலும், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கான பாஜக பூத் கமிட்டி மாநாடு திண்டுக்கல்லில் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இந்த மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       If Vijay knew politics he would have known about One Nation One Election says Nayinar Nagendran