உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி: தங்கம் வென்ற தமிழன் ஆனந்த்குமார் வேல்குமார்..! - Seithipunal
Seithipunal


உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில்  ஆனந்த்குமார் வேல்குமார் தங்கம் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

இவர் ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை 500 மீட்டர் ஓட்டத்தில் ஸ்பிரிண்ட் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்று சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் முதல் சீனியர் பதக்கம் வென்றவர் என்ற வரலாற்றைப் படைத்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த வெற்றி கிடைத்துள்ளமை மெய் சிலிர்க்க வைக்கிறது.

சீனாவில் இன்று திங்களன்று நடைபெற்று வரும் ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 1000 மீட்டர் இன்லைன் ஸ்பீட் ஸ்கேட்டிங் பிரிவில் தங்கப் பதக்கத்துடன், தமிழரான தமிழ்நாட்டின் ஆனந்த்குமார் வேல்குமார் மீண்டும் வரலாற்றைப் பதிவை செய்துள்ளார்.

இது குறித்து அவரது தந்தை வேல்குமார் கூறியதாவது; சென்னை கேகே நகரில் உள்ள ஒரு பேட்மிண்டன் மைதானத்தில் ஸ்கேட்டிங் செய்வதிலிருந்து உலக சாம்பியனாக முடிசூட்டப்பட்ட தனது மகன் ஆனந்த்குமார் எப்படி நீண்ட கஷ்டமான தூரங்களை கடந்து  இந்த இடத்திற்கு வந்துள்ளார் என்பதை நினைவு கூர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

உலக ஸ்கேட்டிங் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஆனந்த்குமாருக்கு பாராட்டு பலதரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Anandkumar Velkumar wins gold in the 1000 meters at the World Skating Championships


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->