‘ஆபரேஷன் சிந்தூர்’ ஜெய்ஷ்-இ-முகமது தளபதி அப்துல் ரவுஃப் அசார் கொல்லப்பட்டான்!
india pakistan Operation Sindoor Jaish e Mohammed terrorist
‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப்படும் இந்திய ராணுவத்தின் தாக்குதலில், தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் முக்கிய தலைமையகங்கள் அழிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேரும், அவருக்கு நெருக்கமான நான்கு முக்கிய உதவியாளர்கள், 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் பஹாவல்பூர் பகுதியில் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், அமைப்பின் இயக்க தளங்கள் முற்றிலும் சிதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த தாக்குதலில் அந்த அமைப்பின் முக்கிய தளபதி மற்றும் IC-814 இந்திய விமான கடத்தல் சம்பவத்தில் முக்கியமாக செயல்பட்ட அப்துல் ரவுஃப் அசார் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அப்துல் ரவுஃப் அசார், மசூத் அசாரின் சகோதரராக இருந்தவரும், ஜெய்ஷ் இயக்கத்தில் மூத்த கட்டளை அதிகாரியாக இருந்தவரும் ஆவார்.
English Summary
india pakistan Operation Sindoor Jaish e Mohammed terrorist