பாகிஸ்தான் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 16 பேர் பலி!
india vs pakistan Operation Sindoor
பாகிஸ்தான், திட்டமிட்டு இந்தியாவின் 15 ராணுவ தளங்களை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் மூலம் தாக்க முயன்றது.
ஆனால் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அந்த முயற்சியை அதிவேகமாக கண்டறிந்து முற்றிலும் தோல்வியடையச் செய்தன.
இந்த முயற்சிக்கு பதிலடியாக, இந்தியா நேற்று மே 7 ஆம் தேதி அதிகாலை பாகிஸ்தானின் பல முக்கிய வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்து தாக்கியுள்ளது. லாகூரில் அமைந்திருந்த ஒரு முக்கிய ராணுவ கட்டமைப்பு தாக்குதலில் முற்றிலும் சேதமடைந்தது என்று பாதுகாப்பு அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.
இதனையடுத்து, ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் கனரக பீரங்கிகள் மற்றும் மோர்டார்களால் கூடிய தாக்குதலை தீவிரமாகத் தொடர்ந்து வந்தது. குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தர், ரஜோரி உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் அதிகரித்ததை இந்திய ராணுவம் கடும் தாக்குதல்களால் பதிலடி கொத்து கட்டுப்படுத்தியது.
பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதல்களில் 16 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். அதில் மூன்று பெண்கள், ஐந்து குழந்தைகள் அடங்குவர்.
English Summary
india vs pakistan Operation Sindoor